Popular Posts

Saturday, March 29, 2014

கலகக்காரர்கள்



Hidhaya


இறைவனின் திருப்பெயரால்
கலகக்காரர்கள்
சகோதர, சகோதரிகளே, நண்பர்களே,அமைதியை குலைக்கும் விதமாக
கலகம் ஏற்படுத்துபவனும்,குண்டு வைத்து அப்பாவி உயிர்களை பலி வாங்குபவனும் தண்டிக்கபடவேண்டியவனுங்களே.
கலகத்திற்கு ஏதேனுமொரு காரணத்தை எதிர்பார்த்து காத்துகிடப்பவனுக்கு ஏதேனும் கிடைத்துவிட்டால் ஆதாரம் கூட தேடாமல் நடந்திருக்கக்கூடிய விடயம் எதேச்சையான அசம்பாவிதமா அல்லது உண்மையான விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?என்பதையெல்லாம் கலகக்காரனாகிய முட்டாள்கள் சிந்திப்பதில்லை.ஏனெனில் எப்பொழுது அப்பாவி உயிர்களை பலிவாங்குவோம் என்று காத்து கிடக்கும் ஓநாய்களாய் இருப்பதால் அப்பாவிகளின் இரத்தங்களை குடிக்கத் தவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொன்றுவிட்டோம் என்று கொக்கரிப்பதில் அவர்களுக்கு இன்பம்.இவ்வாறு இயற்கையிலேயே பலஹீனமான பெண்களையும்,என்னவென்றே அறியாத பச்சிளங்குழந்தைகளையும், வயதானவர்களையும்,இன்னும் அப்பாவி ஆண்களையும் கொடூரமாய் கொலை செய்துவிட்டு வீரம் போற்றும் ஓநாய்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், உங்களை போலவே இப்படி இழிவான செயல்களை செய்வதற்கு ஒரு கணம் போதாதுஇயல்பாகவே அல்லாஹ்வைத் தவிர எவனுக்கும் ஒரு இஸ்லாமியன் அஞ்சுவதில்லைஉண்மையான வரலாற்றை புரட்டி பாருஆனால் போர் செய்தால் கூட அதிலும் நிறைய ஒழுக்கங்களை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.பெண்களையும் குழந்தைகளையும்,போரிடமுடியாத வயதானவர்களையும் ,இன்னும் பலஹீனமானவர்களையும் தாக்கக்கூடாது என்று.(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திய போர்களின் வரலாற்று சான்று ஆதாரத்துடன் உள்ளது.ஆதாரம் இல்லாமல் இருப்பதற்கு புராணக்கதைகள் இல்லை.)மாறாக தூக்கத்தில் உள்ளவர்களிடத்திலிருந்து உங்கள் கலகம் ஆரம்பிக்கிறது.இதுவா வீரம்?படைகளை திரட்டிக்கொண்டு எண்ணிக்கையில் குறைவாய் இருப்பவர்களை வீழ்த்துவது வீரமாகாது…!பெண்களை கூட்டமாய் கற்பழிப்பது வீரமாகாதுஒரு கர்ப்பிணியை நோகடித்து அதன் சிசுவையும் கொடூரமாய் கொலை செய்த நாய்களே ஈவு இரக்கம் இல்லாட்டியும் குறைந்தபட்சம் உங்கள் தாய்,சகோதரி ஒரு பெண்தானே அதை கூடவா சிந்திக்க உங்களுக்கு மூளை இல்லை.?ஒரே தந்தையற்குதான் பிறந்தீர்களா?இவ்வாறு மூளை மழுங்க காரணம் என்ன?
இப்படியெல்லாம் பத்தாயிரம் முஸ்லிம்களை அழித்துவிட்டாலும் இல்லை கோடிக்கணக்கில் அழித்துவிட்டாலும் இஸ்லாத்தை அழித்துவிடமுடியாது.
நம்மை படைத்த இறைவன் நமக்கே நமக்காய் முழுமைப்படுத்தி தந்த மார்க்கம்தான் இஸ்லாம் மார்க்கம். அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமில்லைஎல்லா உயிரினத்திற்கும்அவனே இறைவன்.அல்லாஹ் என்றால் கடவுள்,இறைவன் என்ற ஒருவனையே குறிக்கும். மக்காவில் இந்த கலகக்காரர்களை விட கொடூரமாய் காட்டு மிராண்டியாய் இருந்தார்கள்.இன்று முழுக்க இஸ்லாமிய நாடாக இருக்கின்றது. எண்ணிக்கை அதிகப்படுத்தி இஸ்லாத்திற்கு பெருமை சேர்க்க அவசியமில்லை.இஸ்லாம் அறிவியல் பூர்வமான,மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய தெள்ளதெளிவான மார்க்கம்.என்னதான் சதி திட்டம் தீட்டி அணுகுண்டே வைத்து முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க நினைத்தாலும் ஒருக்காலும் முடியாது இன்ஷா-அல்லாஹ்.இஸலாத்தையும்,இஸ்லாமியர்களையும் கண்டு பொறாமை படுவதைவிட்டு விட்டு இஸ்லாம் என்றால் என்ன?என்ன சொல்கிறது?என்று காழ்ப்புணர்ச்சி இல்லாது ஆராய முற்பட்டால் அல்லாஹ் நாடினால் முட்டாள்களே(கலகக்காரர்களே…) உங்களுக்கும் நேர்வழி கிடைக்கும்.அறிவு பிறக்கும்.அதைவிட்டு விட்டு கோழைத்தனமான செய்கை உங்களுக்கு பலன் அளிக்கப் போவதில்லை.ஏனெனில் இறந்தபின் உங்கள் கூடவே இருந்த கூட்டாளிகளோ,உறவினமோ உங்களோடே குழிக்குள் வரப்போவதில்லை.இஸ்லாம் பெயரில் குண்டு வைப்பது இஸ்லாம் பெயரில் கலங்கத்தை ஏற்படுத்த எதையாவது தோற்றுவிப்பது ஒன்றுமே பயன் தரப் போவதில்லைஉண்மையான இஸ்லாமியன் ஒரு அப்பாவி உயிர்களை பலி வாங்கமாட்டான்.தாடி வைத்தவன்,தொப்பிபோட்டவன்,முஸ்லிம் பெயர்வைத்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை.எவன் அல்லாஹ்விற்கும் (இறைவன்) அவன்  கட்டளைக்கும் அஞ்சி நடக்கின்றானோ அவனே முஃமீன்(இறைவிசுவாசி).இஸ்லாத்திற்குள் வாரீர்.
-ஹிதாயத்துல்லாஹ்.

No comments:

Post a Comment